யாழ்.பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியரால் தாக்குதலுக்குள்ளான மாணவன் (Photos)
யாழ்.பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவருக்கு சரீரத் தண்டனை வழங்கியமை சட்டத்துக்கு முரணாகவும் மாணவர் நலனுக்கு முரணானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்து மூலமான விளக்கக் கடிதத்தை வழங்கியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்தில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தினால் விசாரணை இடம்பெற்றுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு மாணவருக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கோரியிருந்தது.
மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணை
விளக்கக் கடிதத்தில் குறித்த காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் அது தொடர்பில் தாம் எடுத்த நடவடிக்கை தொடர்பிலும் பாடசாலை அதிபரால் விளக்கம் அளிக்கப்பட்டது.
விளக்கக் கடிதத்தில் மாணவனுக்கு தண்டனை வழங்கிய ஆசிரியர் பகுதித் தலைவராகவும் ஒழுக்காற்று குழு உறுப்பினராகவும் செயல்படடு வருவதுடன் கடந்த காலங்களில் தனது கடமைகளை நேர்த்தியாக செய்துள்ளார்.
இடம்பெற்ற சம்பவத்தில் மாணவனுக்கு சரீரத் தண்டனை வழங்கியமை சட்டத்துக்கு முரணானவும் மாணவர் நலனுக்கு முரணானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்டனை வழங்கிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பகுதித் தலைவர் மற்றும் உப அதிபரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
எனினும் குறித்த விடயம் சட்ட மீறலாகவும் நீதிமன்ற நடவடிக்கைக்கு
உட்படுத்தப்பட்டிருப்பது பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கு மன வருத்தத்தைத்
தருகிறது.
தாபன விதிக் கோவையின் பிரமாணத்திற்கு அமைய எச்சரிக்கை
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பகுதித் தலைவரை அழைத்து எந்தக் காரணத்துக்காகவும் மாணவர்களுக்கு சரீரத் தண்டனை வழங்கக்கூடாது என தாபன விதிக் கோவையின் பிரமாணத்திற்கு அமைய எச்சரிக்கை செய்யப்பட்டது என பாடசாலை அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.
இவ்விளக்கக் கடிதத்தின் பிரதி பணிப்பாளர் தேசிய பாடசாலைகள் பிரிவு ,கல்வி
அமைச்சு இசுறுபாய பத்திரமுல்லவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
