மீண்டும் தொற்று ஏற்படாத வகையில் பாடசாலையில் சுகாதார நடைமுறைகளை பேணவேண்டும்: வலய கல்வி பணிப்பாளர்
மிகவும் இக்கட்டான நிலையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மீண்டும் ஒரு தொற்று ஏற்படாத வகையில் பாடசாலையில் சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறு மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மெதடிஸ்த்த மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதியாகக் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சிரேஷ்ட விரிவுரையாளர் பி.இளங்கோ, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் வி.பவானந்தன்,மொரட்டு பல்கலைக்கழக ஆய்வாளர் பொறியியலாளர் கபீலா சுப்ரமணியம்,மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் சி.சுபாகரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
2020ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றியவர்களில் பொறியியல் பீடத்திற்கு 14மாணவர்களும் வர்த்தக பிரிவுக்கு 03மாணவர்களும், மருத்துவ பீடத்திற்கு ஒரு மாணவரும், தொழில்நுட்ப பீடத்திற்கு 02மாணவர்களும், ஏனைய துறைகளுக்கு 12மாணவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஓரே தடவையில் பாடசாலையில் பொறியியல் துறைக்கு 14மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்வில் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் கோபிநாத் பாடசாலை சமூகத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வலய கல்வி பணிப்பாளர்,
தற்போது இக்கட்டான நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகளை நடாத்திமுடிப்பதே பிரதான நோக்கமாகவிருக்கின்றது.
இந்த வருடத்தில் பிற்போடப்பட்டுள்ள பரீட்சைகளை அடுத்த வருடத்திற்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மீண்டும் ஒரு தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது.
அதன் காரணமாக சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றப்படவேண்டும். அடிக்கடி சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
சுழற்சி முறையான கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. பாடசாலையினை முழுமையாக மூடிவிடுவது என்பதற்கு அப்பால் சுழற்சி முறையில் இயங்குமானால் அனைத்து மாணவர்களுக்கும் சீரான கற்பித்தல் செயற்பாடுகளை வழங்கமுடியும்.
பாடசாலைகள் தொடர்ச்சியாக மாணவர்கள் தொற்றுக்குள்ளாகாமல் கல்விகற்கக் கூடிய
நிலையினை ஏற்படுத்த அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.











16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
