பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை
போதைப்பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது சவால் மிக்கதாக உள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(15.12.2022) கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,ஐஸ் போதைப்பொருள் உட்பட அபாயகரமான போதைப்பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது சவால் மிக்கதாக உள்ளது.

எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, பொலிஸ் மற்றும் முப்படையினரை ஒன்றிணைத்து போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
கடுமையான தீர்மானங்களை எடுக்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து போகும்.”என தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan