பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04.04.2023) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
அதன்படி பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை,நாளை முதல் ஏப்ரல் 16ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும் 2022ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக மே மாதம் 13ஆம் திகதி முதல், மே மாதம் 24ஆம் திகதிவரை, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
