பாடசாலை விடுமுறை நாட்களில் மாற்றம்! - கல்வி அமைச்சின் அறிவிப்பு
ஏப்ரல் 19ம் திகதியன்று பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை காலங்களில் மாற்றங்கள் ஏற்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறையை ஒக்டோபர் மாதத்தில் வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.
மேலும், க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ளதால், டிசம்பர் மாதத்துக்கான விடுமுறையை ஜனவரி மாதம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
ஆகவே, ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு க.பொ.த. உயர் தரம், 5 ஆம் தர புலமை பரீட்சை, க.பொ.த. சாதாரண தர பரீட்டைசகள் நடத்தப்படும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சசின் உயர்மட்ட குழு கலந்தாலோசித்து வருகிறது.
5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியன்றும், க.பொ.த உயர் தரப்பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும், க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாத கடைசி வாரத்திலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri