சீரற்ற காலநிலை! பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய (15) தினமும் மூடப்படும்.
மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பதில் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் தீர்மானம்
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி செயலாளர் அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது நிலவும் காலநிலை காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 13 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
