சீனாவில் பாடசாலை உடற்பயிற்சி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி
வடகிழக்கு சீனாவில் உள்ள பாடசாலை ஒன்றின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய தினம் (24.07.2023) இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் நடந்தபோது உடற்பயிற்சிக் கூடத்தில் 19 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் பெர்லைட் எனப்படும் கனிம கட்டுமான பொருளை, மேற்கூரையில் வைத்துக் கட்டியது தெரிய வந்துள்ளது.
விரிவான விசாரணை
அதிகப்படியான நீரை இந்த கனிமப் பொருள் உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே, மழை நீரில் நனைந்து எடை அதிகம் கூடியதில் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.
கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பாளர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
