சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவிக்கு அதிபரால் நேர்ந்த கதி
நிகவெரட்டிய கபல்லேவ பாடசாலை மாணவி ஒருவரை உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான அதிபர் நேற்று பிற்பகல் நிகவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய 17 வயதுடைய மாணவி ஒருவரே சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உடலியல் துஷ்பிரயோகம்
அதிபர் மாணவியுடன் காதல் தொடர்பு வைத்து இவ்வாறு உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சந்தேகநபரான அதிபர் இன்று நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
