மாணவியை கடத்திய இளைஞனை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்
புத்தளத்தில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலுக்கட்டாயமாக 15 வயதான மாணவியை கடத்திச் சென்றதாக 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
கடந்த 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற மகள் திரும்பி வரவில்லை என அவரது தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, செயற்பட்ட பொலிஸார், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவியையும் சந்தேக நபரான இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
காதல் உறவின் அடிப்படையில் இந்த கடத்தல் நடந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 16 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
