கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி படுகாயம்! இருவர் கைது (PHOTO)
கிளிநொச்சி ஏ 35 வீதியின் பரந்தன், முரசுமோட்டை பகுதியில் இன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்தில் பாடசாலை மாணவியொருவர் ஏற முற்பட்ட வேளையில் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
இதன்போது குறித்த விபத்தினை ஏற்படுத்திய பேருந்தினையும் அதன் சாரதியினையும் தருமபுரம் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
இதன் காரணமாக காயமடைந்த சிறுமியின் சகோதரர் உட்பட இருவர் பேருந்தை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் கைது
சம்பவத்தில் காயமடைந்த மாணவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து பேருந்தினை கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர் உட்பட இருவர் விபத்துடன் தொடர்புடைய பேருந்தை வழிமறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரம் பொலிஸார் விபத்தினை ஏற்படுத்திய பேருந்தினையும் விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் உடனடியாக விடுவித்துள்ளதுடன், மாறாக விபத்தை மூடி மறைக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri