விலை அதிகரிப்படவுள்ள பாடசாலை உபகரணங்கள்
மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் என்பற்றின் விலை அதிகரிப்பினால் பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலம், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதால் விலையை அதிகரிக்காமல் நிறுவனங்களை நடத்த முடியாதுள்ளதாகவும் உற்பத்தி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி நிறுவனங்கள்
அரச பாடசாலைகளின் முதலாம் தவணை வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் தொடங்கவுள்ள நிலையில் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு தயாராகுவோரின் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.
அத்தோடு, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் குறைந்த விலையில் பயிற்சிப் புத்தகங்களை அச்சிடுவதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.