பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்தியவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி - வெளிநாடு செல்லும் வாய்ப்பு
தேவையான ஜப்பானிய மொழித் தேர்ச்சி பெற்றிருந்தால், பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்தியவர்களும், கனரக வாகன ஓட்டுநர் பதவிகள் உட்பட ஜப்பானில் உள்ள சில வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையின் (SLFEA) தலைவர் லால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைந்த ஒரே வேலைவாய்ப்பு முகமையான SLFEA, இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஜப்பான், தென்கொரியா, இஸ்ரேல் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
கிடைக்கக்கூடிய வேலைகளில் கட்டுமானம், தொழிற்துறை, திறன்மிகு வர்த்தகங்கள், சுகாதாரம், தகவல் தொழிநுட்பம், பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட துறைகள் அடங்கும்.

குறைந்த செலவில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு
திறமையான, ஓரளவு திறமையான மற்றும் தொழில்முறைப் பணியாளர்களை இந்த முகமை தேடுகிறது. விண்ணப்பதாரர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் இருப்பை வலுப்படுத்துவதையும், திறமையான இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam