யாழில் 16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் தவறான முடிவெடுத்து மாணவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08.10.2023) இடம்பெற்றுள்ளது
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்றுமுன்தினம் (07) கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவனுக்கும் தந்தைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நித்திரைக்கு சென்றனர்.அதன்பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பெற்றோர், மகனை தேடியவேளை மகனை காணவில்லை.
பின்பு வீட்டின் பின்புறம் இருந்த மரம் ஒன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயமா பிறேம்குமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
