மரம் முறிந்து வீழ்ந்ததில் மற்றுமொரு சிறுவன் உயிரிழப்பு
கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த 5 வயதுடைய சிறுவனொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பாடசாலை மாணவன் இன்றைய தினம் (10.2.2024) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற மரம் முறிந்து வீழ்ந்ததில் 5 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ தினத்தன்று உயிரிழந்தார்.
அதேநேரம் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், குறித்த இரண்டு சிறுவர்களில், கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam