சூடுபிடிக்கும் ஹிஷாலினி விவகாரம்! - கையெழுத்து பகுப்பாய்வுக்கு நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த போது சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்த ஹிஷாலினி பயன்படுத்திய சில பாடசாலை புத்தகங்கள் கையெழுத்து பகுப்பாய்வுக்காக அரசு ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்ட சொற்றொடர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறையின் சுவரில் "என் சாவுக்கான காரணம்" என்று எழுதப்பட்டிருந்தது. பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் தனது கருத்தை தமிழில் அர்த்தப்படும் வகையில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
எனவே அவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை பகுப்பாய்வுக்காக அரசு ஆய்வாளரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
கையெழுத்து பகுப்பாய்வைத் தொடர்ந்து, இந்த கருத்து இறந்தவரா அல்லது வேறு யாராலும் எழுதப்பட்டதா என்பதை தீர்மானிக்க முடியும் என்று உறுதிசெய்ய முடியும்.
ஹிஷாலினி அவிசாவளை, புவக்பிட்டிய தமிழ் பாடசாலையில் தரம் 7 வரை படித்ததாக அவரது சகோதரர் கூறியுள்ளார். எனினும், தனது சகோதரி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தனது சகோதரி வசித்த அறையின் சுவரில் எழுதப்பட்டமை குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
