கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"அடுத்த வருடத்திற்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பிரதான நிலை தேசிய பாடசாலைகளை தவிர மற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
டிஜிட்டல் மயமாக்கல்
மேலும், தென் கொரியாவின் கொய்கா நிறுவனம் 85 பில்லியன் டொலர்களை ஓசியன் பல்கலைக்கழகத்திற்கு (Ocean University of Sri Lanka) வழங்க உள்ளது.
மேலும், 2700 உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட் பலகைகளை பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முழு பாடசாலை வலையமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவது அரசின் திட்டமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இன்று (23) உள்ளூர் கடைகளில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
