பாடப் புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கை இடைநிறுத்தம்
பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் இந்த ஆண்டில் திட்டமிட்டவாறு பாடப் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை
பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக விலை மனுக் கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான முற்பணம் மற்றும் புத்தகங்கள் அச்சிடப்பட்டதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் என்பன இதுவரையில் வழங்கப்படவில்லை.
பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு முற்பணமாக 20 வீத கொடுப்பனவு வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்கத் தவறியதனால் அச்சு நிறுவனங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
