புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகத்திற்காக காத்திருக்கும் நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவு உற்பத்தியில் தன்னிறைவான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றையேனும் உற்பத்தி செய்ய முடிந்தால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதனை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
