எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்: அஜித் குணசேகர
கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை தொழிலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான விவசாயிகள் தமது தொழிலை கைவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை
தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000லிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை தொழில்
தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, கோழிப்பண்ணை தொழிலை நடத்துவதற்கு தேவையான கால்நடை தீவனங்களை வழங்குவது மற்றும் இறக்குமதி செய்வதை விட நாட்டிற்குள் இருந்து பெறப்படும் வழிமுறைகள் மூலம் அதை தக்கவைப்பது போன்ற குறுகிய கால தீர்வுகளை அதிகாரிகள் கவனித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.