யாழ்.வைத்தியசாலையில் நடைபெற்ற மில்லியன் கணக்கான மோசடி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அர்ச்சுனா
மில்லியன் கணக்கான பணம் யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுமார் 30 மில்லியன் பெறுமதியான பணம் வைத்திய அதிகாரிக்கு தெரியாமல், பெண் வைத்தியரொருவரால் பாவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ''வைத்திய அதிகாரிக்கு தெரியாமல், வைத்தியர் கிருஷாந்தி 30 மில்லியன் பெறுமதியான பணத்தை தனது சொந்த பணமாக எடுத்து கென்சர் வைத்தியசாலைக்கு பாவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகள் தனிநபர்களின் விருப்பத்திற்கமைய நிர்வகிக்கபடுகின்றன.
இவ்வாறு வைத்தியசாலைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து நான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்று உரையாடிவிட்டு வருகிறேன்.''என கூறியுள்ளார்.
இது குறித்து அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
