யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!
தமிழர் தேசிய பரப்பில் சமீப நாட்களில் இடம்பெற்றுவரும் கட்சிகளின் கூட்டிணைவு என்பது உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவோம், ஆட்சியை நிலைநாட்டுவோம் என கூறிய தமிழ் தலைவர்களுக்கு அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கியிருக்ககூடும்.
இது கட்சிகள் சில செய்துக்கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மாறுபடும்.
இவ்வாறு தமிழர் தரப்புகளால் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும் நோக்கில் எடுக்கப்பட்ட இவ்வாறான முயற்சிகள் எதிர்கால அரசியல் நகர்த்தலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேயர் தெரிவு
உள்ளூராட்சி சபைகளின் மேயர், தவிசாளர், உதவி மேயர், உதவித் தவிசாளர் தெரிவுகள் இந்த வாரம் இடம்பெறவுள்ளது. அதன் எதிர்பார்ப்புகள் சூடுபிடித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள், ஆதரவு கோரிக்கைகள் என்பன பல தரப்புக்களாலும், பல கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டு வந்தாலும், இன்றுவரை எந்த கட்சியும் ஆட்சியை நிலைநாட்டுதல் தொடர்பில் உறுதித்தன்மையற்ற நிலையில் காணப்படுகின்றன.
இதற்கமைய “தங்களது ஆட்சியே எங்கும்” என கூறிய தமிழரசுக் கட்சியின் யாழ். உள்ளிட்ட வடக்கு மாகாணத்திற்கான உள்ளூராட்சி சபைகளின் ஆதிக்கநிலை இங்கு நோக்கத்தக்க விடயங்களில் முக்கிய ஒன்றாகும்.
தமிழ் மக்கள் பேரவை, தமிழரசு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை பெரும்பான்மை பெற்ற தமிழ்த் தேசியவாத அணிகளாக காணப்படுகின்றன.
உள்ளூராட்சி தேர்தல்
இவர்களுடன் அண்மையில்தமிழரசுக்கட்சி ஆட்சியை அமைப்பதற்கான அரசியல் பேரம் பேசலை கடந்த காலங்களில் முன்னெடுத்தது.
அது யாழ். மாவட்டத்தை பொறுத்தவரையில் கை கூடியுள்ளதா? என்பது கேள்விக்குறியே. மேலும், ஒருபுறம் அரசியல் பேரம் பேசலில் தமிழரசு கட்சி தோல்வி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கில் தமிழரசு கட்சி அதிக சபைகளில் வெற்றிபெற்றிருந்தது. எனினும் பெரும்பான்மை என்பது அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதன் பின்னணியில் கூட்டணி அமைக்கும் முயற்சியை அக்கட்சி மேற்கொண்டது. ஆனால் அது சரிவுகளை சந்தித்துள்ளது என்றே கூறவேண்டும்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு அரசியல் உடன்படிக்கை தமிழரசுக்கட்சியின் சரிவை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் வன்னியில் கஜேந்திரன் தரப்பும், சங்கு தரப்பும் செய்துக்கொண்ட ஒப்பந்தம் தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகியுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
வன்னி தேர்தல் தொகுதியில் மட்டும் 10 சபைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றும் என நம்பப்படுகிறது.
முல்லைத்தீவில் இரு சபைகளை மாத்திரமே தமிழரசு தக்கவைக்கும் நிலை வந்துள்ளது.மன்னார் என்பது கேள்விக்குரியான ஒன்று. ஆகவே, பெரும் இடர்களுக்கு மத்தியில் தமிழரசு கட்சிக்கு வடக்கில் அதிக உள்ளூராட்சி சபைகளை இலக்கும் கூறப்படுகிறது.
யாழ். மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 6 சபைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 35 சபைகளில் 16 சபைகள் சைக்கிள் சங்கு அணியினருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதன் பின்னணியே தமிழரசு கட்சி வடக்கின் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை இலக்கும் என்பதை எடுத்துகாட்டுகிறது.






அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
