வீடுகளுக்கு பணிப்பெண்களை அமர்த்தும் மோசடி கும்பல்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
வீடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பி அவர்களின் உதவியுடன் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பெம்முல்ல பொலிஸார் தெரிவித்துள்னர்.
கம்பஹா - பெம்முல்ல பகுதியினை சேர்ந்த பெண் , அவரது மகன் உட்பட மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹங்குரன்கெத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் கைது
சப்புகஸ்கந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது குறித்த பெண் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட கும்பல் கைது செய்ய்பட்டுள்ளனர்.
தனது ஏழு வயது பேரனுடன் இரண்டு மாடி வீட்டில் வசித்த ஐம்பத்து நான்கு வயது பெண்ணின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு வீட்டிலிருந்து தங்க நகைகள் மற்றும் இரண்டு தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்,பிரதான சந்தேகநபரான பெண் மினுவாங்கொட பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



