வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 300 இலட்சம் மோசடி: தம்பதியினர் தலைமறைவு
ருமேனியா நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி புத்தளம் மாவட்டம் முழுவதும் சுமார் 300 இலட்சம் ரூபாவை ஏமாற்றிய நுரைச்சோலை மற்றும் மாதம்பையில் வசிக்கும் தம்பதியினர் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடுவளை, ஹலவத்தல, மாதம்பே, வென்னப்புவ, கட்டுனேரிய, மாரவில, மாதம்பே, கருக்குவ ஆகிய பிரதேசங்களில் தாம் வாழ்ந்த வாடகை வீட்டில் இருந்து 25 நபர்களிடத்தில் இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் தகவல்
சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை இலங்கை முழுவதிலும் உள்ள 16 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த தம்பதியினரை கைது செய்யமுடியவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் மற்றும் காசோலைகளின் நகல்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுமேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.