பொலிஸாரின் வன்முறையை தடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள உயர்நீதிமன்றம்
இலங்கையின் உயர்நீதிமன்றம், கண்டி தலதுஓயா காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள், தாக்குதல் மற்றும் சித்திரவதையின் மூலம், ஒரு லொறி ஓட்டுநரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் பொலிஸாரின் வன்முறையை கடுமையாக கண்டித்துள்ளது.
அடிப்படை உரிமை மீறல்
பொலிஸாரின் மிருகத்தனமாக செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரியது என்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.

முன்னதாக, 2019 ஏப்ரல் 1 இரவு, லொறி தூங்கிக் கொண்டிருந்த 46 வயது ஓட்டுநரை, பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தாக்கி, கைது செய்துள்ளனர்.
இது, மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் கட்டளையின் பேரிலேயே நடந்துள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரியின் லொறி சாரதியாக கடமையாற்றியவரே சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த சாரதியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
பொலிஸ் அதிகாரியிடம் சாரதியாக இருந்த தாம், சட்டவிரோத மணல் கொண்டு செல்லும்போது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டவிரோத செயலை தொடர்ந்து செய்ய மறுத்தமையே, தம்மீதான தாக்குதல்களுக்கு காரணம் என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri