எமக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியும்: எஸ்.பி. திஸாநாயக்க - செய்திகளின் தொகுப்பு
எமக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று முன்தினம்(23.10.2023) ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியும்.இதற்காக செய்வதற்கு எங்களுக்கு எத்தனையோ விடயங்கள் உள்ளன. வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முடியும்.
அப்போது நெருக்கடியொன்று ஏற்படும். இவ்வாறாக செய்யக் கூடிய பல விடயங்கள் உள்ளன. அவ்வாறாக செய்யும் எதிர்பார்ப்புகள் எங்களுக்கு கிடையாது. அப்படி செய்வது நாட்டுக்கு பாதிப்பாக அமையும்” என்று கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
