இந்தியாவின் புதிய யுக்தி! பாகிஸ்தானின் பதில் தாக்குதலை ஏற்கனவே நிறுத்திய நாடு மீண்டும் களத்தில்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபைருடன் அவசர சந்திப்பை மேற்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர சந்திப்பு
அடெல் அல்ஜுபைருடனான சந்திப்பின் போது,பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்தும், தீவிரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வது குறித்த இந்தியாவின் கண்ணோட்டம் குறித்தும் ஜெய்சங்கர் ஆலோசனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த அவசர சந்திப்புகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ல், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத் தீவிரவாதிகளுக்கு எதிராக பாலக்கோட்டில் தாக்குதல் ஒன்று நடத்தப்படடுள்ளது.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தான், பாலக்கோட்டில் நடந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த திட்டங்களை வகுத்து வந்ததுள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட சவுதி அரேபியா பாகிஸ்தானை பதில் தாக்குதல் நடத்த விடாமல் தடுத்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்
அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான் உடன் சவுதி அரேபியா பல கட்ட கூட்டங்களை ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் அப்போதைய பதில் தாக்குதல்களை தடுத்து நிறுத்த உதவிய, அந்த சவுதி அரேபியா சந்திப்புகள் அப்போது பிரபலமானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் மீண்டும் சவுதி அரேபியா களத்திற்குள் வந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அவரது அறிக்கையில் இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.
பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை எதிரிகள் நடத்தி உள்ளனர். போர் நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
