சவூதியின் முடிவால் ஆசியப் பிராந்தியத்திற்கு உருவாகவுள்ள புதிய நெருக்கடி
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அரம்கோ, ஏப்ரல் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஆசிய நாடுகளுக்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடல் துறைமுகமான யான்புவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரப் லைட் கச்சா எண்ணெயை மட்டுமே தனது நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாகவும் இதன்மூலம் ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கான விநியோகத்தைக் கட்டுப்படுத்தி, அவற்றின் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தியையும் வரம்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி விலையில் நேரடி தாக்கம்
சவூதி அரேபியா மார்ச் மாதத்தில் இதுவரை ஒரு நாளைக்கு 4.355 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது,
இது பெப்ரவரியில் இருந்த 7.108 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவை விடக் குறைவு என கேப்லர் (Kpler) பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன.
சீனாவின் முன்னணி சுத்திகரிப்பு நிறுவனமான சினோபெக் (600028.SS), மார்ச் மாதத்தில் யான்புவிலிருந்து சுமார் 24 மில்லியன் பீப்பாய் சவூதி கச்சா எண்ணெயை ஏற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் (பெற்றோல், டீசல் போன்றவை) அளவும் குறையக்கூடும்.
இந்த விநியோகக் குறைப்பு, எதிர்வரும் மாதங்களில் ஆசிய பிராந்தியத்தில் எரிசக்தி விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 16 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri