அமெரிக்க இராணுவ ஒப்பந்தம்! புதிய திட்டத்தை வகுத்த சவுதி அரேபியா
அமெரிக்காவுடன் இடம்பெற்ற இராணுவ விமான ஒப்பந்த விவகாரமானது தாமதமடைந்ததால், அதிருப்தி அடைந்த சவுதி அரேபியா, துருக்கி விமானப்படையின் 5ஆம் தலைமுறை விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் துருக்கிக்கும், சவூதி அரேபியா விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கும் இடையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.
35 ரக போர் விமானம்
இந்நிலையில், எஃப் 35 ரக போர் விமானத்தை சவூதி அரேபியாவுக்கும் விற்பனை செய்வது, இஸ்ரேல் -அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறும் வகையிலான செயற்பாடாக பார்க்கப்படுகிறது.
குறித்த ஒப்பந்தமானது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சார்பில் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ தளவாடங்கள் என்பது மற்ற நாடுகளை விட நவீனத்துவத்துடன் இருக்க வேண்டும் என கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அமெரிக்கா தாமத நிலையை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
சவூதி அரேபியா
மேலும், யேமன் உள்நாட்டு போரில் சவூதி அரேபியா தலையிட்டதுடன், இதில் சீனாவுடனான இராணுவ ஒத்துழைப்பையும் அதிகரித்துள்ளது.
இந்த விவகாரமும் அமெரிக்காவின் தாமத நிலைக்கு காரணமாகலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் பெண்டகன் சார்பில், ‛சவூதி அரேபியா எஃப் 35 ரக போர் விமானத்தை வாங்க ஆர்வமாக உள்ளதாகவும், இதுபற்றி மீண்டும் ஆலோசனை செய்து கடைசி கட்ட முடிவு எடுக்கப்படும்' என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நேற்றுவரை அமெரிக்கா சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |