உலகின் பாரிய தங்க சுரங்கமாக மாறப்போகும் சவுதி அரேபியா: தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு
சவுதி அரேபியாவில் தங்கச்சுரங்கங்களையொட்டி கணிசமான தங்கப்படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Makkah பகுதியில் உள்ள Mansourah மற்றும் Massarah தங்கச் சுரங்கங்களுக்கு அருகில் புதிய தங்கப்படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சவுதி சுரங்க நிறுவனமான Saudi Arabian Mining Company (Ma’aden) இதனை தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் பொருளாதாரம்
2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுத்திட்டத்தில் இதுவே முதல் கண்டுபிடிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட மாதிரிகள், மன்சூரா மஸ்ஸராவிலிருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு சீரற்ற துளையிடும் தளங்களில் 10.4 கிராம் (g/t) தங்கம் மற்றும் 20.6 g/t தங்கம் என்ற உயர்தர தங்க வைப்புத்தொகைகள் இருப்பதைக் குறிக்கின்றது.
மேலும் இந்த சுரங்கம் மூலம் சவுதி அரேபியாவின் பொருளாதாரம் எதிரொலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |