ஹஜ் யாத்திரைக்காக 1500 இலங்கையர்களுக்கு அனுமதி! அதிக டொலர்கள் தேடுவதில் சிக்கல் நிலை!
2022ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக, சவூதி அரேபியா, இலங்கைக்கு 1585 இடங்களை ஒதுக்கியுள்ளது.
எனினும் இந்த யாத்திரைக்காக, முகவர்கள் 6.3 மில்லியன் டொலர்களை(22 பில்லியன் ரூபாய்) திரட்டுவதில் கேள்வி எழுந்துள்ளது.
பயணக்கட்டணம்
ஒவ்வொரு யாத்திரிகருக்கும் வானுார்தி கட்டணத்தை தவிர்த்து, 2.1 மில்லியன் தேவைப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டணம், பொதுவாக 20-27 நாட்களுக்கு உணவு, போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் சவுதி அரேபியாவின் வரிகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தநிலையில் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், ஹஜ் யாத்திரை ஒதுக்கீடு மற்றும் அதன் ஏற்பாடுகளைத் தொடர்வதற்கான திட்டங்களைப் பற்றி ஏற்கனவே புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அதன் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்த பின்னரே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்பாடுகள்
நாட்டின் பொருளாதார சூழ்நிலையிலும் ஹஜ் யாத்திரையை சாத்தியமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை தாம் ஆராய்ந்து வருவதாக மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதிகளை தேடும் பொறுப்பு யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா நடத்துபவர்களிடம் விடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இது மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக சந்திப்பு ஒன்று கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
