அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் நடைபவனி
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25) வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து சேகரித்தல் செயற்பாடு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மக்களின் ஏற்பாட்டில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (22) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா பெரிய பள்ளிவாசல்
அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நடைபவனியாக வவுனியா பெரிய பள்ளிவாசல் நோக்கிச் செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.

பெரிய பள்ளிவாசலில் மதியம் 12.30 மணியளவில் விசேட தொழுகை இடம்பெற்ற பின்னர், அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துகள், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.






Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan