அனோஜன் விவகாரம்: இந்தியாவின் தலையீடு குறித்து வெளியான தகவல்
அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார்.
அனோஜன் சிவராஜா தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்களிப்பை கோரி இன்று(23.9.2026) மாலை இந்திய தூதரை த.மு.கூ தூதுக்குழு சந்தித்தது.
இதன்போது, இலங்கை அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதே வேளை, அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு, அனோஜன் விவகாரத்துக்கு, ஒட்டு மொத்த இலங்கையர்கள் சார்பில் தீர்வு தேடவே தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என மனோ கணேசன் தெரிவித்தார்.
மனு கையளிப்பு
இதனையடுத்து, இந்திய பிரதமருக்கான எழுத்து மூலமான மனு ஒன்றும் கையளிக்கபட்டது.

இந்தக் கலந்துரையாடலில் ஜ.ம.மு பொது செயலாளர் பரணீதரன் முருகேசு, உப தலைவர் பாரத் அருள்சாமி, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கோபி கணேசமூர்த்தி, ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri