அனோஜனின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் யாழ். முஸ்லிம்கள்: யாழ். மாநகரசபை உறுப்பினர் வலியுறுத்தல்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும், சகோதரர் சிவராசா அனோஜனின் குற்றம் தொடர்பில் நாம் பேசுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் புனித இஸ்லாமிய சமயத்தின் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் உறுதியாக நிற்கின்றது.
இராஜதந்திர மற்றும் சர்வதேச முயற்சி

அனோஜனின் விவகாரத்தை அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவரது உயிரைப் பாதுகாப்பதற்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அனைத்துச் சட்ட, இராஜதந்திர மற்றும் சர்வதேச முயற்சிகளையும் முன்னெடுப்பது.
இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் வெறுப்பையும் தூண்ட முயற்சிப்பவர்களின் செயற்பாடுகளிலிருந்து மக்களையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது.
இவை இரண்டுமே மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் அணுகப்பட வேண்டிய முக்கிய பணிகளாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதும், அதேவேளை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் எனத் தனது ஊடக அறிக்கையில் முழுமையாக வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri