அனோஜனின் தண்டனை விவகாரம்! ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்ட மனு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தேசிய மகா சபை – வடக்கு மாகாண ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியம் சார்பில் இக்கோரிக்கை மனு நேற்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
'சிவராசா அனோஜனுக்கான கருணை மனு' எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த மனுவில், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையொருவரின் நிலைமை அவரது குடும்பத்தினருக்கும் உயிரின் பெறுமதியை மதிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கை மனு
இவ்விடயத்தில் உடனடி மற்றும் கருணையுடனான கவனத்தை செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இராஜதந்திர, சட்ட மற்றும் மனிதாபிமான வழிமுறைகளின் ஊடாகச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தண்டனையைத் தளர்த்துதல், மாற்றுதல் அல்லது அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வ நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு உடனடியாக அனுப்பி வைத்து, உரிய கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை மனுவும் ஜனாதிபதியின் கவனத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
வேலையற்றப் பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் யாவை..! சபையில் சஜித் பிரேமதாஸ கேள்வி