8 ஆவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம் - அரசியல்வாதிகள் அசமந்தம்
வவுனியா, பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9 ஆம் திகதி சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அவர்களது போராட்டம் இன்றுடன் எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி, உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. மைதானம் இன்மை,வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல வருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர், அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் எமது விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.
தற்போது போராட்டத்தை முன்னெடுத்து எட்டு நாட்கள் கடக்கின்ற நிலையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் கூட தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறியவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோர் மாத்திரமே வருகை தந்து தமது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட நிலையில் தேர்தல் காலங்களில் வருகை தரும் வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan