சட்டமும் மக்களும் நூல் வெளியீட்டு விழா
அமரர் ஆசிரியர் அ.க. இராமலிங்கத்தின் 25ஆம் ஆண்டு நினைவினை ஒட்டி அவரது புதல்வரான மூத்த வழக்குரைஞர் இரா.திருக்குமரநாதனின் 'சட்டமும் மக்களும்' நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
நேற்று, இ. கி. ச. இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் கேட்போர் கூடத்தில் குறித்த விழா நடைபெற்றது.
சிறப்பு பிரதிநிதிகள்
இராமலிங்கத்தின் மூத்த புதல்வன் இரா. சண்முகநாதன், மலரின் சிறப்பு பிரதிநிதிகளை கிழக்கு மாகாண ஆளுநரது பிரத்தியோக செயலாளர் வி.இராஜசேகர், ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் பிரதம குருக்கள், இ. கி. ச. இந்துக் கல்லூரியின் அதிபர் எஸ்.கணேஷலிங்கம், திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் உ. அஜித்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு மூத்த வழக்குரைஞர் இரா.திருக்குமரநாதன் மலரின் சிறப்பு பிரதிகளை வழங்கி வைத்தார் மேலும் அறிவு ஒளி மையத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் மற்றும் பதங்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் திருகோணமலையின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.










பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
