அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பினை லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விலை விபரம்
ஒரு கிலோ சோயா மீட் இன் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 580 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 290 ரூபாவாகும்.
ஒரு கிலோ நெந்தலி மீனின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,100 ரூபாவாகும்.
ஒரு கிலோ பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 620 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 195 ரூபாவாகும்.
சிவப்பு பருப்பு 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 299 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

கையில் சிக்கிய மகளை இறுகப் பிடித்துக் கொண்டேன் : கொத்தட்டுவ விபத்தில் சிக்கிய தந்தை வெளியிட்ட தகவல்(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
