27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்ப்பு
27 பொருட்களுக்கு சதொச நிறுவனம் வழங்கி வரும் சலுகையை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக சதொச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருவதால் நுகர்வோரை ஏனைய வியாபாரிகளால் ஏமாற்றுவதற்கு ஏமாற்ற முடியவில்லை.
சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதொச நிறுவனம் செயற்படுகின்றது. அத்துடன் சலுகைப் பொதிக்கு பாரிய கிராக்கி நிலவுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டமை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமையும் என பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri