எதிர்வரும் புத்தாண்டில் இலட்சக்கணக்கானோருக்கு கிடைக்கப்போகும் சலுகை
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொதியை வழங்க சதொச விற்பனை நிலையங்கள் திட்டமிட்டுள்ளன.
மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்து உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 5,000 ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொதியொன்று 50% தள்ளுபடியுடன் 2,500 ரூபாவுக்கு வழங்கப்படும்.
தகுதி பெறும் குடும்பங்கள்
தகுதியுள்ள பயனாளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்களினால் பொதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள எட்டு இலட்சத்து 12,753 குடும்பங்கள் இந்த செயற்றிட்டத்திற்கு தகுதி பெறுவர்.
ஏப்ரல் 1ஆம் திகதி முதல் ஏப்ரல் 13ஆம் திகதி வரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
