புதிய கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் கனடாவின் முக்கிய மாகாணத்தின் அறிவிப்பு
கனடாவின் முக்கிய மாகாணமான Saskatchewanஇல் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை Saskatchewan மாகாணத்தின் பிரீமியரான Scott Moe அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெடரல் அரசின் கூற்றுப்படி கடந்த ஏழு நாட்களில் கனடாவில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது Saskatchewan மாகாணத்திலேயே அதிகம் என தெரியவருகிறது.
அத்துடன், கடந்த ஏழு நாட்களில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையும் இந்த மாகாணத்திலேயே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் Saskatchewan மாகாணத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மாகாண மருத்துவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே Saskatchewan மாகாண பிரீமியர் Scott Moe குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெரும்பான்மையோர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், இப்போதைக்கு இருக்கும் கட்டுப்பாடுகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் புதிதாக கட்டுப்பாடுகள் எதுவும் இப்போதைக்கு விதிக்கப்படாது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

விஜய் அஜித்துக்கு நிகராக 'தி லெஜண்ட்': தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா? Cineulagam
