அரங்க சமூக அரசியல் செயற்பாட்டாளரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்
அரங்க சமூக அரசியல் செயற்பாட்டாளரும் கிராமிய உழைப்பாளர் சங்க நிறுவுனர்களில் ஒருவருமான சரவணை பாலசிங்கத்தின் (பாலா மாஸ்டர்) இரண்டாம் ஆண்டு நினைவு அரங்கம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிழ்வானது நேற்று முன்தினம் (27.04.2024) உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
நினைவு தின நிகழ்வு
இந்நிகழ்வில் கலாநிதி சிறிகணேசன் , ரொசாங்கன் , அ. நாகரத்தினம் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தியுள்ளனர்.
மேலும் ஒடுக்கப்பட்டோரின் ஆயுதமாக அரங்கு என்ற தலைப்பில் கலாநிதி தே.தேவானந்த் உரை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன் கிராமிய கலைகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் புதுவை அன்பின் உரையாற்றியதுடன் சுகி பாலாவின் அரசியல் பணிகள் என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேவை, சத்திரிய தர்மம் நாடகங்களும் மேடையேற்றப்பட்டுள்ளன.