நீதிபதிகளை கூட பேரினவாதம் இன ரீதியில் நோக்குகின்றது: சம்பந்தன் சீற்றம்
இலங்கையில் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. நீதி கிடைக்க அவர்கள் தொடர்ந்தும் போராடுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலிப் போராட்டத்திலும் தமிழ் பேசும் மக்கள் ஓரணியாகத் திரண்டு பங்கேற்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக ரீதியில் போராட்டம்
தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்று நீதித்துறை மீதும் பாய்ந்துள்ளது. நீதிபதிகளைக் கூடப் பேரினவாதம் இன ரீதியில் நோக்குகின்றது' என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் போராடித்தான் நாம் நீதியை - தீர்வைப் பெற வேண்டுமெனில் ஜனநாயக ரீதியில் நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். எமது போராட்டங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
