தனது மாமனார் செய்த தவறுக்கு ரணில் பிராயச்சித்தம் தேட வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் வலந்தலை மடத்துகரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் பொழுது 1983 ஆம் ஆண்டு யூலை மாதமளவில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி பொது சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஈஸ்வரபாதம் சரவணபவன்,
பிரித்தானியா
மேலும், கறுப்பு ஜூலை படுகாெலையை கண்டித்தும்இ தற்போதைய இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தும் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் தங்களுடைய கொடூரப் பக்கத்தை காட்டி 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூறுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் கலந்து காெண்டுள்ளனர்.
இதன்பாேது, இலங்கை அரசாங்கத்தை கண்டித்தும் படுகொலைகளுக்கு நீதிகோரியும் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - திலீபன்
40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாத தமிழ் மக்கள் : சீமான் ஆதங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |