தமிழ் தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும்! ஆவேசமாக எச்சரிக்கை விடுத்த சரத் வீரசேகர
பௌத்த மதத்தின் பெருமைக்குரிய சியாம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது, இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஷ்டானத்திற்கு தமிழ் கூட்டமைப்பினர் தடையேற்படுத்தினால் பாரிய அழிவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (11.05.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
