நாட்டின் வீழ்ச்சிக்கு கோட்டாபயவே முழுக் காரணம்! சரத் வீரசேகர முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கத் தேவை இல்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவாகச் செயற்பட்ட முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் கோட்டாபய ராஜபக்சவுக்குச் சரியாகத்தான் யோசனை கூறினோம், அவர் தான் அதை உதறித் தள்ளி தன்னிச்சையாக முடிவெடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபயவே முழு காரணம்
இதேவேளை அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் பிழையானவை, நாட்டின் வீழ்ச்சிக்குக் கோட்டாபயவே முழு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ரணில் விக்ரமசிங்க சிறந்த ஜனாதிபதி.
அவர் மிகவும் இக்கட்டான நிலையில் நாட்டைப் பாரமேற்றார். சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா எல்லோரும் நாட்டைப் பாரமேற்பதற்குப் பயந்தார்கள்.
எப்படி நாட்டைக் கட்டியெழுப்புவது என்று அவர்கள் யோசித்தார்கள். ஆனால், ரணில் எதையும் யோசிக்கவில்லை.
பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில்
பிரதமர் பதவியை ஏற்குமாறு கோட்டாபய ராஜபக்ச கேட்டதும் எப்போது பதவியேற்க வேண்டும் என்றே ரணில் கேட்டார்.
ரணிலின் திறமையால் - அனுபவத்தால் கோட்டாபய அவரைப் பிரதமராக நியமித்தார். பின்னர் கோட்டாபய விலகியதும் ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்று நாட்டின் நிலைமையை உடன் சரி செய்து விட்டார்.
இப்போது அவர் சிறந்த தலைவர். எமது ஆலோசனைகளைக் ஏற்றிருந்தால் இதே வேலையை கோட்டாபயவும் செய்திருப்பார். நல்ல பெயரைப் பெற்றிருப்பார் என சுட்டிக்காட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
