“சிங்களவர்களுக்கு ஒரே நாடே இலங்கை”! சிங்களே என அழைத்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தும் சரத்
சிங்களவர்களுக்கு ஒரே நாடே இலங்கை, இதனாலேயே இலங்கையை “சிங்களே” என்று முன்னைய காலத்தில் அழைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், நாடு சமஷ்டியாகி 9 துண்டுகளாகினால் வடக்கு, கிழக்கில் சாசனத்தை பாதுகாக்க முடியாது. வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்லியல் இடங்கள் அழிவடையும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் விரட்டி இன சுத்திகரிப்பை மேற்கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமன்றி பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளுமே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri