இனவாத கருத்தால் வாக்கு வேட்டையாடும் சரத் வீரசேகர: சார்ல்ஸ் எம்.பி பகிரங்கம்(Video)
இனவாதத்தை மூலதனமாக்கி, தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் முல்லைத்தீவு நீதவானை மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஈடுபடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான குருந்தூர் விகாரை அமைந்துள்ள குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி அளித்த நீதவான் ஒரு மனநோயாளி என சரத் வீரசேகர சாடியிருந்த நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்றையதினம் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பையும், முல்லைத்தீவு நீதவானின் தனிப்பட்ட விடயங்களையும் இந்த உயரிய சபையில் அவதூறாக பேசியிருந்தார்.
மேலும் இனவாத வாக்குகளை பெற்றுகொள்ளவே இவ்வாறான கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி வருகின்றார்.” என தெரிவித்துள்ளார்.




