அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக சரத் பொன்சேகா நீதிமன்றில் மனு
அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவால் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் சரத் பொன்சேகா இவ்வாறு ரீட் மனுவொன்றை இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ரத்து செய்யுமாறு இந்த மனு மூலம் அவர் கோரியுள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி உபாலி அபேரட்ன, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் சந்திரா பெர்னாண்டோ, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த ஆணைக்குழு விசாரணை நடத்திய விதம் சட்டத்திற்கு முரணானது என சரத் பொன்சேகா, தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆணைக்குழுவிற்கு உண்டான அதிகாரங்களை மீறி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam