போராட்டத்திற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும்-சரத் பொன்சேகா
போராட்டத்திற்கு மீண்டும் உயிரூட்டுமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் பாழடைந்த அறைகளில் தொங்கும் வௌவால்கள்
காலிமுகத்திடலில் மாத்திரமல்ல, கஷ்டங்களுக்கும், அழுத்தங்களுக்குள்ளும் சிக்கியுள்ள அனைத்து மக்களும் போராட்டத்திற்கு உயிரூட்ட வேண்டும்.
போராட்டம் ஒன்றை ஆரம்பித்து நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கை தற்போது சிதைந்து விழுந்த அரண்மனை போன்றது. மூன்று நான்கு தலைமுறை கடந்த பின்னர் அத்திவாரத்தை மூஞ் எலிகள் தோண்டும்.
வீட்டின் கூரைகளை வண்டுகள் அரிக்கும். சுவர்களை கரையான்கள் அரிக்கும். பாழடைந்த அறைகளில் வௌவால்கள் தொங்கும். அந்த வௌவால்களே அரசியல்வாதிகள் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
