விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போர்: யுத்தகுற்றங்கள் தொடர்பில் பொன்சேகா கேள்வி
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது யுத்தகுற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மிகைப்படுத்தப்பட்டவை என சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதனை கூறியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“இராணுவத்தில் உள்ள சிலர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்னால் நிராகரிக்க முடியாது.
நான் இது குறித்து நாடாமன்றத்திலும் பேசியுள்ளேன், இரண்டு முறை பேசியுள்ளேன். 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே?
கட்டுப்பாட்டுடன் தாக்குதல்
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறுதியுத்தத்தின்போது உயிர்தப்பினார்கள் அவர்களை நான் பாதுகாப்பாக வெளியேற்றினேன். முதலில் 2009 மே 19ம் திகதி முள்ளிவாய்க்காலில் இருந்து 150,000 பேரை மீட்டேன். யுத்தம் முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் 85000 பேரை மீட்டேன்.
கண்மூடித்தனமாக பொதுமக்கள் உட்பட அனைவரின் மீதும் தாக்குதலை மேற்கொண்டிருந்தால் ஒருமாதத்திற்குள் யுத்தத்தை முடித்திருக்கலாம் ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை நாங்கள் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டோம்.
நிச்சயமாக இந்த உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை.” என்றார். இதன்போது, நாட்டை எவ்வாறு சரியான பாதையில் கொண்டு செல்ல நினைக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பொன்சேகா, ‘‘ஊழலுக்கு எதிராக போராடுவதுடன் நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் அவசியம்.
உதாரணமாக, பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைகளில் ஓட்டுவது மற்றும் சிறிய, சரளை சாலையில் ஓட்டுவது போல் ஓட்டுவது தெரியாது. இதன்படி தம்முடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு சஜித் பிரேமதாச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நான் பேசத் தயங்கினாலும், அவர் என்னை அழைத்து, வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையாக, ஒன்றாக முன்னேறுவோம் என்று சொல்ல வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ராஜபக்சக்களுடன் இணைந்திருப்பதால் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனக்கு விருப்பமில்லை.
விக்ரமசிங்கவின் தலைமை
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவும் விருப்பமில்லை. அறகலய காலத்திலும் அதற்குப் பின்னரும் அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த பொதுமக்கள் அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால் இலங்கை அரசியலில் தற்போதுள்ள தலைவர்கள் மூலம் அந்த மாற்றம் வரவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, என் கையை உயர்த்தி, பொறுப்பை ஏற்று சில தியாகங்களைச் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை.
தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் விக்ரமசிங்க. விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் நாட்டிற்காக தன்னால் இயன்றதைச் செய்துவருகிறது. பலர் பதவி ஏற்க மறுத்தபோது, விக்ரமசிங்க சவாலை எதிர்கொண்டார். சில பகுதிகளில், சில சாதகமான முடிவுகளை அடைந்துள்ளார்.” என்றார்.

தரமற்ற மருந்தினால் கண் பார்வை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கவில்லை! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
